நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 3

“தம்பி இங்க வா! நான் ரொம்ப நேரமா ஒன்ன பாத்துகினு இருக்கேன். நீ இந்த முனைக்கும் கடசிக்கும் நடையா நடந்துட்டு இருக்கியே! இன்னாதான் வோணும் வொனக்கு?” எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முன்வந்தார் ஆட்டோக்கார அண்ணன் ஒருவர். பாக்கெட் டைரியிலிருந்த முகவரியை காண்பித்து, ஒரு மணி நேரமாக இந்த கோவிந்தசாமி தெருவில் அலைந்தும் என்னால் 23/A எண்ணுள்ள வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன். “தம்பி! ஒன்னால ஊட்ட கண்டுபிடிக்க முடியலன்னா யாராண்டையாவது கேக்கணும்! இப்படி … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 2

வருடா வருடம் நடக்கும் புத்தகத் திருவிழாவை அந்த வருடம் முருகன் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னுடைய அலுவலக நண்பர்களில் என்னையும் மோகனையும் தவிர எவருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் என்பதே இல்லை. இருந்தாலும் மற்றவர்கள் புத்தக அரங்குகளை சுற்றி பார்க்கும் நோக்கிலும் அப்படியே நாங்கள் அங்கு கிடைக்கும் காளான் சூப் வாங்கித் தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பியும் உடன் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கி இருந்தேன் நான். மண்டபத்தினுள் கடைசி அரங்காக சினிமா … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 1

இந்தக் கதையில் வரும் நடிகையின் பெயரை மானநஷ்ட வழக்குகள் வாங்காமல் இருக்கும் பொருட்டு தவிர்த்து விடுகிறேன். அதே சமயம் கதை முழுக்க நடிகை என்று மட்டுமே நான் அவளை குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் கதையில் உயிரோட்டம் இருக்காது. எனவே அவளுக்கு நான் கற்பனையாக ஜெனி என்று பெயரிடுவதென தீர்மானித்துள்ளேன். ஜெனி என்பது ஜெயவர்த்தினி என்பதன் சுருக்கமாகவோ அல்லது ஜெனிஃபர் என்பதன் சுருக்கமாகவோ இருக்கலாம். அவளின் கல்லூரி நண்பர்கள் மத்தியில் அவள் அவ்வாறே அழைக்கப்படுவதாக ஒரு முறை என்னிடம் சொல்லியிருந்தாள். … Read more