அதிதி தேவோ பவ – பகுதி 6

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், வெள்ளை நிற டொயோட்டா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து காதை கிழிக்கும் சத்தத்துடன் தெலுங்கு பாடல் ஒன்று அலறிக் கொண்டிருந்தது. அக்காரிலிருந்து ஒரு இளவட்டக் கூட்டம் இறங்கி, பாலத்தை நோக்கி நடந்து வந்தது. பார்ப்பதற்கு தென்னிந்திய முகஜாடையுடன் இருந்த அந்தக் கூட்டத்தினரில், தமிழன் யாராவது இருக்க போகிறான். கொடியுடன் நிற்கும் என்னை பார்த்தால், “உண்ட உணவுக்கு காசு கொடுக்காததால், தண்டனையாக இவனை கொடியாட்ட வைத்து விட்டார்கள்” என்று தவறாக நினைத்துவிடக் … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 5

பக்கத்திலிருந்த ஆம்லெட் கடையில் உட்கார்ந்துகொண்டும், அவ்வப்போது பார்க்கிங் செய்ய வரும் வாகனங்களுக்கு “ஸாரா ஆகே லே ஜாவோ” என்று குரல் கொடுத்துக்கொண்டும் இருந்தேன். “இப்படி அங்கும் இங்கும் ஓடி ஓடி தகவல் சொல்லிக்கொண்டிருந்தால் என் தாவு தீர்ந்து விடும். ஆகவே ஏதாவதொரு உபாயம் செய்தாக வேண்டும்! என்ன செய்யலாம்?” என்று யோசித்ததில், சட்டென ஒரு யோசனை வந்தது. ஹனோகி பாலத்திற்கு வருவதற்கு முன்னர், சற்றுத் தூரத்தில் பியாஸ் நதிக்கரையில் கொட்டுவதற்காக சதுர வடிவத்தில் வெட்டப்பட்டிருந்த மலைக்கற்கள் அடுக்கி … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 4

நான் எதிர்மறையாகப் பேசியதால்தான் இப்படி நடந்துவிட்டது என்று தோன்றிற்று எனக்கு. ச்சே! என்ன ஒரு சனி நாக்கு எனக்கு. ஓராயிரம் முறை நேர்மறையாகப் பேசியிருப்பேன்; ஆனால் அப்போதெல்லாம் கம்மென்று இருக்கும் இந்தப் பிரபஞ்ச ஈர்ப்பு விதி, இந்த சாவி விவகாரத்தில் டக்கென தன் கடமையை செய்து முடித்துவிட்டது. கமலக்கண்ணன் சகட்டுமேனிக்கு தமிழிலும், தனக்குத் தெரிந்த இந்தியிலும் சரணை திட்ட ஆரம்பித்தான். எனக்கும் கோபம் தலைக்கு ஏறி இருந்தது. சரியான மடையன்! முழங்காலில் மூளை இருப்பவன் கூட இம்மாதிரி … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 3

காரின் முன்னிருக்கையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த என்னை கமலக்கண்ணன் உலுக்கி எழுப்பினார். கண்விழித்து பார்த்தால், கார் ரோட்டிலிருந்து இறங்கி ஏதோ ஒரு ஆல மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்தது. கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரையிலும் ஒரே வயல் வெளிகளும், அதன் மீது வெண்மையான புகைப் பனியும் பரவியிருந்தது. கண்ணை கசக்கிக்கொண்டே வெளியில் நின்றிருந்த கமலிடம், “இது எந்த இடம்?” என்றேன். “நாம பதன்கோட் போற வழியில இருக்குற ஒரு குக்கிராமத்துல இருக்கோம் ஜி. இங்க வந்து பாருங்க,” என்று அருகில் … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 2

புதுதில்லி சுதந்திர நாள் விழாவிற்காக கோலாகலமாகத் தயாராகிக் கொண்டிருந்தது. புதுதில்லி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் என்சிஆர் பகுதி முழுவதும் காவல் பலத்த காவல் போடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று வந்ததால், எங்கள் எல்லோருக்கும் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தது. வருணுடன் முபாரக் பேசிக்கொண்டதிலிருந்து, அவர் அவருடைய அலுவலக நண்பர்களுடன் குல்லு மற்றும் மணாலி போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லவிருக்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்துபோனது. கமலுக்கும் எனக்கும் இங்கு வந்த நாள் முதலே குல்லு–மணாலி சென்று … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 1

இந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் ஏன்தான் வருகின்றனவோ? ஏன் எல்லா நாட்களும் வேலை நாட்களாகவே இருக்கக் கூடாதா? என தோன்றும் அளவிற்கு என்னை வெறுப்படையச் செய்தவர், என்னுடைய அறைவாசியும் பக்கத்து படுக்கைக்காரருமான முபாரக். உருது பேசும் இஸ்லாமியரான முபாரக்கின் சொந்த ஊர் ஐதராபாத். ரங்லா ஹவேலி என்று அழைக்கப்படும் அந்த ஆண்கள் விடுதியில் நாங்கள் தங்கியிருந்த முதல் இரண்டு வாரங்களில், அவர் என்னிடம் சேந்தார் போல பத்து வார்த்தைகள் பேசி இருந்தால் அதுவே அதிகம். என்னிடத்தில் … Read more