நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 7

“நான் ஜெனியோட பிரண்ட். அவள் தான் இன்று என்னை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தாள்” என்றேன். நான் நடிகை ஜெனியை அவள் இவள் என்று உரிமையோடு பேசுவதை பார்த்து “சார் நீங்க மேடமோட பிரண்டுன்னு சொல்றீங்க, அப்ப நீங்க அவங்களுக்கு கால் பண்ணிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்றான்.  அவன் கேட்பது நியாயம்தான். ஆனால் அவள் மொபைல் எண்ணை வாங்குவதற்கு முன்பு அவருடைய தோழிகள் அவசர அவசரமாக அவளை கூட்டிச் சென்று விட்டார்கள். “அவங்களோட போன் நம்பர் என்கிட்ட இல்ல, … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 6

திரையில் தோன்றுவதை போன்ற அதே பளபளக்கும் கேசம். வெள்ளை வெளேரென்ற தேகம். அழகான நெற்றி. எடுப்பான மூக்கு. ரோஜா இதழ் போன்ற உதடு. அதன் கீழே இருக்கும் மச்சம்.  “இத்தனை வருடங்களாக என் கனவில் மட்டுமே வந்திருந்த கனவு கன்னியின் முன்பா நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன்” என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இது கனவல்ல நிஜம் தான்.  திரும்பிப் பார்த்தேன் பவன் தற்போது அந்த இரண்டு பெண்களுடன் கண்டபடி ஆடிக் கொண்டிருந்தான். எங்கள் இருவரை … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 5

நைட் கிளப் அரங்கின் விதிமுறைப்படி பெண்கள் ஆண் துணை இல்லாமல் வரலாம். ஆனால் அப்படி பெண் துணை இல்லாமல் வரும் ஆணை அனுமதிக்க மாட்டார்கள். இந்த விதிமுறை எல்லாம் நன்றாக தெரிந்திருந்தும் பவன் என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தான். பவனின் திட்டப்படி நாங்கள் அரங்கின் நுழைவாயில் அருகே காத்திருக்க தொடங்கினோம். நான் அங்கே உள்ளே நுழையும் ஜோடிகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். சில ஜோடிகள் தனியாகவும் சிலர் நண்பர்களுடனும் வந்திருந்தனர். ஐந்து பெண் நண்பர்களுடன் வந்திருந்த ஒருவனை … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 4

அன்று வழக்கம் போல் அலுவலகம் முடிந்ததும் அலுவலகத்தின் வெளியே அவளுக்காக காத்திருந்தேன். நண்பர்களோடு வெளியே வந்தவள், நேராக போய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள். என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவளது இயந்திரத்தனமான நடத்தையால் நான் வெகுவாக குழம்பிப் போனேன். “சரி நாளை நேரில்  பேசிக் கொள்ளலாம்” என இருந்த எனக்கு மறுநாளும் அதிர்ச்சியாய் இருந்தது. அவளை என்னால் நெருங்க கூட முடியாத படி பார்வையால் நெருப்பை அள்ளி கொட்டினாள். அவள் என் மீது கோபமாக இருக்கிறாள் என்றால் … Read more

நடிகை ஜெனியை காதலிப்பவன் – பகுதி 3

“தம்பி இங்க வா! நான் ரொம்ப நேரமா ஒன்ன பாத்துகினு இருக்கேன். நீ இந்த முனைக்கும் கடசிக்கும் நடையா நடந்துட்டு இருக்கியே! இன்னாதான் வோணும் வொனக்கு?” எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முன்வந்தார் ஆட்டோக்கார அண்ணன் ஒருவர். பாக்கெட் டைரியிலிருந்த முகவரியை காண்பித்து, ஒரு மணி நேரமாக இந்த கோவிந்தசாமி தெருவில் அலைந்தும் என்னால் 23/A எண்ணுள்ள வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன். “தம்பி! ஒன்னால ஊட்ட கண்டுபிடிக்க முடியலன்னா யாராண்டையாவது கேக்கணும்! இப்படி … Read more

டாக்டர் தேவசகாயம் – பகுதி 3

அப்போதுதான் கவனித்தேன். டாக்டர் அறையிலிருந்து ஒவ்வொரு நோயாளியும் சராசரியாக மூன்று நிமிட இடைவெளியில் கையில் மருந்து சீட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். டாக்டர் தேவசகாயத்துக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வேறு வழி தெரியவில்லை போலிருக்கிறது. ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக அழைத்து பார்க்க வேண்டியவர், பேட்ச் ப்ராசஸிங் போல ஐந்து ஐந்து பேராக அழைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அறை ஒருவேளை பெரியதாக இருக்கும்; அதனால்தான் அனைவரையும் தைரியமாக உள்ளே வரச் சொல்லி மருத்துவம் பார்க்கிறார். எனவே … Read more

டாக்டர் தேவசகாயம் – பகுதி 2

தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை முடிந்ததும் ஊமை நாடகம் மீண்டும் தொடர்ந்து. அளவுக்கதிகமாக ஒப்பனை செய்யப்பட்ட அந்த மூன்று பெண்களின் முகத்தையே திரும்ப திரும்ப திரையில் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது.  மீண்டும் அத்தைக்காரி  ஏதேதோ சொல்லி அவர்களை குமுறி குமுறி அழ வைக்காமல் விடுவதில்லை என்ற முடிவோடு  இருந்தாள். வரும் ஆத்திரத்திற்கு எனக்கு அந்த டீவி பெட்டியை தூக்கி போட்டு உடைத்து விடலாமா எனத் தோன்றியது. கடந்த அரை மணி நேரமாக அந்த … Read more

டாக்டர் தேவசகாயம் – பகுதி 1

“நிறுத்துங்க! எங்க அண்ணன யாருன்னு நினைச்சிட்டு இருக்கீங்க? சின்ன வயசுல உங்க எல்லோரையும் தவிக்க விட்டுட்டு போய் சேந்துட்டா உங்க அம்மா! அன்னைக்கு உங்க அப்பாவுக்கு சொந்தத்துலேயே பல பேரு பொண்ணு கொடுக்க தயாரா இருந்தாங்க. ஆனா  எங்க ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா தன்னோட குழந்தைகள பாத்துக்க முடியாம போயிடுமோன்னு, கல்யாணம் பண்ணிக்காம இருவது வருஷமா உங்களுக்காகவே வாழ்ந்தவருடி அவரு… அவரோட தியாகத்துலையும் உழைப்புலையும் படிச்சி ஆளாகிட்டு, இன்னைக்கு நீங்க அவரையே எதிர்த்து கேள்வி கேக்கிறீங்களா? … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 6

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், வெள்ளை நிற டொயோட்டா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து காதை கிழிக்கும் சத்தத்துடன் தெலுங்கு பாடல் ஒன்று அலறிக் கொண்டிருந்தது. அக்காரிலிருந்து ஒரு இளவட்டக் கூட்டம் இறங்கி, பாலத்தை நோக்கி நடந்து வந்தது. பார்ப்பதற்கு தென்னிந்திய முகஜாடையுடன் இருந்த அந்தக் கூட்டத்தினரில், தமிழன் யாராவது இருக்க போகிறான். கொடியுடன் நிற்கும் என்னை பார்த்தால், “உண்ட உணவுக்கு காசு கொடுக்காததால், தண்டனையாக இவனை கொடியாட்ட வைத்து விட்டார்கள்” என்று தவறாக நினைத்துவிடக் … Read more

அதிதி தேவோ பவ – பகுதி 5

பக்கத்திலிருந்த ஆம்லெட் கடையில் உட்கார்ந்துகொண்டும், அவ்வப்போது பார்க்கிங் செய்ய வரும் வாகனங்களுக்கு “ஸாரா ஆகே லே ஜாவோ” என்று குரல் கொடுத்துக்கொண்டும் இருந்தேன். “இப்படி அங்கும் இங்கும் ஓடி ஓடி தகவல் சொல்லிக்கொண்டிருந்தால் என் தாவு தீர்ந்து விடும். ஆகவே ஏதாவதொரு உபாயம் செய்தாக வேண்டும்! என்ன செய்யலாம்?” என்று யோசித்ததில், சட்டென ஒரு யோசனை வந்தது. ஹனோகி பாலத்திற்கு வருவதற்கு முன்னர், சற்றுத் தூரத்தில் பியாஸ் நதிக்கரையில் கொட்டுவதற்காக சதுர வடிவத்தில் வெட்டப்பட்டிருந்த மலைக்கற்கள் அடுக்கி … Read more